மலரிலிருந்து விழுந்த மழைத்துளி
கண்ணம் தொடும்போது;
வாடைக்காற்றின் ஈரம்
நாசிவழி நகரும்போது;
மழைக்காற்றின் வேகம்கூடி
காதுமடல் சில்லிடும்போது;
மழை நின்றுவிட்ட சாலையை காணும்போது;
தொலைவில் ஒலிக்கும்
ஏகாந்த இசையை கேட்கும்போது;
மனம் தொலைந்துவிட விரும்பும்போது;
கண்களுள்ள இடத்தில் உன் உதடுகளை
பொருத்திக்கொள்கிறேன்.
மழை வரும்போதெல்லாம்
உனை வந்து சேர்வேன்.
Nov 22, 2007
Oct 7, 2007
காதல் மட்டும்
இலக்கணங்கள் இல்லாமற்போன ஒருநாளின்
முன் இரவில் நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கியதால்!
பின் இரவில் நான் என்னையே காதலிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் அப்போது நான் இந்த உலகத்தையே காதலித்தேன்!
காரணங்கள் எதுவும் இல்லாமல்;
உனக்கு அழத்தோன்றிய கணங்களில்
உன் கண்களின் வழியே வழிந்தது காதல்.
இமைக்க மறந்து சில சமயம், பிரக்ஞை-அற்று, ...
நீ அருகில் இல்லாத ஒரு மழை நாளில்;
எனக்கான உன் வாசலில் நின்றுகொண்டு சிரித்தன
உன் சிரிப்பின் மிச்சங்கள்.
உண்மையில் காதல் இரக்கமற்ற-தாக இருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)