May 30, 2007

ஒன்றுமில்லாதது

அந்த அறைக்குள் வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது.
என்னுடன் தனிமை துணையாக!

அசைந்துகொண்டிருந்த சட்டையின் நிழலை
வெறித்தது கண்கள்.

நினைவுகளும் கசிந்தன.

கண்கள்மூடி திறந்தபோது
அதற்கு முந்தைய கணங்கள்
என் நினைவில் இல்லை!

வெறுமையின் சூழல்
எப்போதும் புரிவதில்லை யாருக்கும்!

May 26, 2007

அவள் கண்களோடு

அது

காற்றில் ஈரப்பதம் குறைந்த ஒரு மாலை !
மழை நின்ற தூவானம் !
யாரும் இல்லாத சாலை !

நீ
நான்

நடப்பது போல் நடித்தன நாம் கால்கள்
மௌனம் மட்டும் நம்மிடையே
மௌனத்தை மொழிபெயர்த்தது நம் கண்கள்
இமைகள் இமைக்க மறந்து வேடிக்கை பார்த்தன
இதயம் துடித்தது மெதுவான வேகத்தில்

அளவிட முடியாத காதலில்
தொலைந்துகொண்டிருந்தோம்

எதிர்பாராத தருணத்தில்
நம் கைகள் தீண்டிக்கொள்ள
சட்டென பூத்தது ஒரு குறுநகை
உன் இதழ்களில்

அப்போது நான் காற்றிடம் சத்தியம்
செய்தேன்
இவள் உலக அழகி.