மலரிலிருந்து விழுந்த மழைத்துளி
கண்ணம் தொடும்போது;
வாடைக்காற்றின் ஈரம்
நாசிவழி நகரும்போது;
மழைக்காற்றின் வேகம்கூடி
காதுமடல் சில்லிடும்போது;
மழை நின்றுவிட்ட சாலையை காணும்போது;
தொலைவில் ஒலிக்கும்
ஏகாந்த இசையை கேட்கும்போது;
மனம் தொலைந்துவிட விரும்பும்போது;
கண்களுள்ள இடத்தில் உன் உதடுகளை
பொருத்திக்கொள்கிறேன்.
மழை வரும்போதெல்லாம்
உனை வந்து சேர்வேன்.
Nov 22, 2007
Oct 7, 2007
காதல் மட்டும்

இலக்கணங்கள் இல்லாமற்போன ஒருநாளின்
முன் இரவில் நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கியதால்!
பின் இரவில் நான் என்னையே காதலிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் அப்போது நான் இந்த உலகத்தையே காதலித்தேன்!
காரணங்கள் எதுவும் இல்லாமல்;
உனக்கு அழத்தோன்றிய கணங்களில்
உன் கண்களின் வழியே வழிந்தது காதல்.
இமைக்க மறந்து சில சமயம், பிரக்ஞை-அற்று, ...
நீ அருகில் இல்லாத ஒரு மழை நாளில்;
எனக்கான உன் வாசலில் நின்றுகொண்டு சிரித்தன
உன் சிரிப்பின் மிச்சங்கள்.
உண்மையில் காதல் இரக்கமற்ற-தாக இருக்கலாம்.
Jul 18, 2007
காதல் பசி
ஒரு பின்பனிக்கால அதிகாலையில்
நம் படுக்கையறை.
குளித்து முடித்த உன் ஈரக்கூந்தல்
வாசம் கேட்டு விழித்தது என் மூளை.
இமைகள் திறந்தபோது
பார்வையில் விரிந்தது உன் பூ முகம்.
வெடித்த உதடுகள் மோகப்பார்வை வீசின.
சிரித்த கண்கள் கவிதை பேசின.
உன் அடர் கானகக் கூந்தல் உதிர்த்த ஒற்றைத்துளி
பட்டுச் சிலிர்த்தது என் மூளை.
நீ புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்தபோது
என் மூளைக்குப் பசிக்கத் தொடங்கியது.
நம் படுக்கையறை.
குளித்து முடித்த உன் ஈரக்கூந்தல்
வாசம் கேட்டு விழித்தது என் மூளை.
இமைகள் திறந்தபோது
பார்வையில் விரிந்தது உன் பூ முகம்.
வெடித்த உதடுகள் மோகப்பார்வை வீசின.
சிரித்த கண்கள் கவிதை பேசின.
உன் அடர் கானகக் கூந்தல் உதிர்த்த ஒற்றைத்துளி
பட்டுச் சிலிர்த்தது என் மூளை.
நீ புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்தபோது
என் மூளைக்குப் பசிக்கத் தொடங்கியது.
May 30, 2007
ஒன்றுமில்லாதது
அந்த அறைக்குள் வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது.
என்னுடன் தனிமை துணையாக!
அசைந்துகொண்டிருந்த சட்டையின் நிழலை
வெறித்தது கண்கள்.
நினைவுகளும் கசிந்தன.
கண்கள்மூடி திறந்தபோது
அதற்கு முந்தைய கணங்கள்
என் நினைவில் இல்லை!
வெறுமையின் சூழல்
எப்போதும் புரிவதில்லை யாருக்கும்!
என்னுடன் தனிமை துணையாக!
அசைந்துகொண்டிருந்த சட்டையின் நிழலை
வெறித்தது கண்கள்.
நினைவுகளும் கசிந்தன.
கண்கள்மூடி திறந்தபோது
அதற்கு முந்தைய கணங்கள்
என் நினைவில் இல்லை!
வெறுமையின் சூழல்
எப்போதும் புரிவதில்லை யாருக்கும்!
May 26, 2007
அவள் கண்களோடு
அது
காற்றில் ஈரப்பதம் குறைந்த ஒரு மாலை !
மழை நின்ற தூவானம் !
யாரும் இல்லாத சாலை !
நீ
நான்
நடப்பது போல் நடித்தன நாம் கால்கள்
மௌனம் மட்டும் நம்மிடையே
மௌனத்தை மொழிபெயர்த்தது நம் கண்கள்
இமைகள் இமைக்க மறந்து வேடிக்கை பார்த்தன
இதயம் துடித்தது மெதுவான வேகத்தில்
அளவிட முடியாத காதலில்
தொலைந்துகொண்டிருந்தோம்
எதிர்பாராத தருணத்தில்
நம் கைகள் தீண்டிக்கொள்ள
சட்டென பூத்தது ஒரு குறுநகை
உன் இதழ்களில்
அப்போது நான் காற்றிடம் சத்தியம்
செய்தேன்
இவள் உலக அழகி.
காற்றில் ஈரப்பதம் குறைந்த ஒரு மாலை !
மழை நின்ற தூவானம் !
யாரும் இல்லாத சாலை !
நீ
நான்
நடப்பது போல் நடித்தன நாம் கால்கள்
மௌனம் மட்டும் நம்மிடையே
மௌனத்தை மொழிபெயர்த்தது நம் கண்கள்
இமைகள் இமைக்க மறந்து வேடிக்கை பார்த்தன
இதயம் துடித்தது மெதுவான வேகத்தில்
அளவிட முடியாத காதலில்
தொலைந்துகொண்டிருந்தோம்
எதிர்பாராத தருணத்தில்
நம் கைகள் தீண்டிக்கொள்ள
சட்டென பூத்தது ஒரு குறுநகை
உன் இதழ்களில்
அப்போது நான் காற்றிடம் சத்தியம்
செய்தேன்
இவள் உலக அழகி.
Apr 23, 2007
Mar 9, 2007
Subscribe to:
Posts (Atom)